கீற்றில் தேட...


கருத்தமேகத்தில் அசையும்
கணக்கற்ற ஓவியமும்

காலையிலும் மாலையிலும்
கண்கூசாக் கதிரழகும்

கால்தூக்கி நடைபயிலும்
தன்குழந்தை நாட்டியமும்

கற்புநெறி தவறாத
தன்மனைவி பேரழகும்

கண்ணிழந்த
மனிதனின் கண்ணுக்கு
எட்ட....

கனத்த மழையின் இசையும்
வலுத்த மின்னலின் ஓசையும்

தென்றலின் இசையும்
அலையின். ஓசையும்

மழலை இசையும்
யாழும் குழலும்
எழுப்பும் ஓசையும்

செவியிழந்த மனிதனுக்கு
செந்தமிழின் ஓசையும்
எட்ட...

பசிக்கும் குழந்தையின்
ஜனனத்தில் மரணித்த
தாயின் மார்பும்
எட்டமுடியாத உயரங்களே.

கண்டணூர் சசிகுமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.