ஏமாந்துவிட்டீர்கள்
அது அழைப்பல்ல
வலை
அழைத்து அவமதிக்கும்
நாகரீகவித்தை
அந்த இடத்திற்கு
உங்கள் மூளையை
அனுப்பிவைத்தது தவறு
எடை போடத்தெரியாதவர்களால்
எப்படி எடைபோடமுடியும்?
'எடை'மட்டுமே தெரிந்தவர்களுக்கு
இதயம் எப்படித்தெரியும்!
நீளம் அகலம்
வண்ணம்பார்த்து வருணிக்கத்தெரிந்தவர்களை
ஏலம்போட விடலாம்
எடைபோட விடக்கூடாது
ஈரம் சார்ந்தவாழ்க்கையில்
ஈயம் இழந்தவர்களுக்கு
இடமே இல்லை
வியர்வையின் ஒவ்வொருதுளியும்
எழுப்பும் வினாக்களுக்கு
என்ன விடை?
எங்கே விடை?
வியர்வையின்துளி ஒவ்வொன்றும்
உதிரும்போதே உலருமென்பது
தப்புக்கணக்கு
உதிரும்போதே அது
உளியானதுதான்
உண்மையான உண்மை
அந்த
ஊற்றுக்கண் துணையுடன்
இன்னும் செதுக்குவேன்
என்னையும் செதுக்குவேன்
- பிச்சினிக்காடு இளங்கோ (