கீற்றில் தேட...


வாசமில்லாத ஒரே காரணத்திற்காக
சூடாமலே விட்டுப்போன வாடா மல்லி நான்

சாவி கொடுக்க ஆளின்றி ஓடாது நின்றுபோன
ஆனால் பழுதுபடாத கடிகாரம் நான்

உப்பாய் போன காரணத்திற்காக யாரும்
குடிக்காமல் விட்டுப்போன அலைகடல் நீர் நான்

வரதட்சணை கொடுக்கமுடியாமல்
திருமண சந்தையில் சீண்டாது விட்டுப்போன
முதிர்கன்னி நான்

கண்டுபிடிக்க ஏதுமில்லாததால்
கண்டுகொள்ளாமல் விட்டுப்போன
விஞ்ஞானி நான்

மொத்ததில் நானொரு மன நோயாளி...