காதலிக்கிறேனென்று சொல்லி
என் காதலை
ஒற்றை வரியில் - நீ
அடிமைப்படுத்த
மறுக்கிறதென் இதயம்
உண்மையில்
உன் அழகையும் தான் - நான்
ரசிக்கிறேன்
உன்
அழகின் ஒவ்வொரு பாகத்திலும்
நான் ரசித்துக் கரைகிறேன்
உன் சுவாசக்காற்றில்
நானொரு பூவாகி
உன் மலர் மார்பில்
கண்ணுறங்கத் துடித்தாலும்
அறிவால் மட்டும் தள்ளியிருக்கிறேன்
உணர்வால் உன்னுடனையே இருக்கிறேன்
எந்த உணர்ச்சிகளுக்கும் உச்சமுண்டு
ஆனால் - நம்
காதலுக்கு மட்டுமதில்லை!
காதலின் அலைகள் ஓய்வதில்லை
காதலின் உணர்வுகளை நாம் ஓய்வெடுக்க
விடுவதுமில்லை
காதலித்து காதலித்து
அந்த சொல்லமுடியா
சுகம் கவலை - இவை
இரண்டிலுமுள்ள மகிழ்ச்சியில்
எத்தனை பேரின்பமடி என் தோழி!!!
- சுரேஷ் (