
உன் கண்ணீர் துளிகள்
கவலையின் அளவைக்
கணக்கிட்டு
சொல்கின்றன.
அடுத்த முறை
கண்ணீர் காணநேர்ந்தால்
அது ஆனந்தத்தின்
அளவுகோலாக
இருக்கட்டும்.
கவலைப்படுகையில்
பாறாங்கல்லாய் இறுகும்
மனது
அழுது முடிந்தபின்
பறவையாகிவிடுகிறது.
நீயும் பறவையாக
வேண்டும்
நீ பறப்பதற்காகவே
எப்போதும்
பகலாக்கி
வைத்திருக்கிறேன்
என் வானத்தை.
- கோவி. லெனின்