மண்ணிலா பாதாளத்திலா?
பால்காரன் தண்ணீரில்லா
பால் தருகிறானே?
இதென்ன அதிசயம்
தினசரியில் ஏதும் அச்சிடாமல்
வெறும் வெண்தாள்களாய்..
நாட்டில் கொலை, கொள்ளை
ஊழல், வழக்கு
ஏதும் இல்லையா..?
அட யாரிது அழகாய் என் முன்னே
"இந்தாங்க அங்கயே தான் இருந்தது"
* -6.5 என் கண்ணாடி பவர்.
- விழியன்