
தலைகள் எங்கோ தொலைவில்
வெளவால்கள் கூட
அடையாளம் காண முடியவில்லை.
பிணவிருட்டு ரப்பர் தோட்டத்தை
முற்றுகையிட்டிருந்தது.
கண்களெட்டும் தூரம்வரை
சனநடமாட்டமே இல்லை.
வெட்டிய கத்திகளை தேடி நாய்கள்
மூக்குக்குள் புல் செருகி நிற்கின்றன.
கத்திகளின் வாடையே இல்லை.
மரண விசாரணை அதிகாரி
பேனாவை மூடிவிட்டு
புறப்பட்டு விட்டதாக
செயலாளர் சொன்னான்.
வலது கை செய்ததை
இடது கையறியாது.
தூரத்தில் இறப்பர் பால் வெட்ட
தொழிலாளர் போகின்றனர்.
கொழுந்தெடுக்கவும்...
பஸ் ஒன்று தூரத்தில் போகிறது.
பாதையால் மக்கள் மூக்கை பொத்தியபடி
போகின்றனர் முணுமுணுத்தடிக்கு.
தூரத்தில் கழுகுகள் வட்டமிடுகின்றன
அங்குமாக்கும்.
- இளைய அப்துல்லாஹ், லண்டன் (