காற்றினுள் சிறு கீற்றெனப்
பறந்து சென்றது மாலைவேளை

வீழ்ந்த எரிநட்சத்திரம் குளிர்ந்ததைப்போல்
உணர்வுகள் பேதலித்துத் தவித்தன
பாத்திரத்திற்குள் தவறி விழுந்த பல்லியினும்
அதிகமாய்
பிரபஞ்சத்தின் இறுதிமலரைப் போன்ற
பாவனையுடன் உதிர்ந்தது
அம்மலர்
இப்படியாக நெருங்கும் இரவின்
அசைவைப் பார்க்கையில்
காலம் ஒரு சிறகெனக் கனக்கிறது
- குட்டி ரேவதி