என்னுடனே பயணிக்கும் பழக்கம்

உதைத்தால் நீயும்..
நடந்தால் நீயும்...
நின்றால் நீயும்..
கொஞ்சம் தனிமையில் விட்டுவிடு
எனக்குள் நானே
அழுவதை சிரிப்பதை
போரிடுவதை சமாதானமாவதை
கேள்வியிடுவதை பதில் பெறுவதை
யாரும் காண வேண்டாம்
வேண்டாம் நீ
போ...தூரப் போ
நிஜத்தோடு மட்டும் வாழ ஆசை..
- விழியன்