
உறையுள்
அப்புறம் நீ
என் அத்தியாவசிய தேவைகள்
*********************
உன்
கையை குத்திய
ரோஜா முள்ளை
சபிக்க மனமில்லை
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
தடவிக்கொடுப்பேன்
உன் கை தொட்ட சுகம்...
*********************
உன் பெயர் தெரியாவிட்டாலென்ன
நான்
பூக்களையெல்லாம்
பெயர் தெரிந்தா ரசிக்கிறேன்?
*********************
உன்னைப்போலத்தான்
உண்மையைச் சொன்னால்
எனக்கும் என்னைப் பிடிப்பதில்லை
*********************
உனக்குளிருக்கும்
நானும்
எனக்குளிருக்கும்
நீயும்
காதலிக்கிறோம்
நமக்குத் தெரியாமல்
- ரிஷி சேது (rishi_