குளித்துவிட்டு
தலை துவட்டினேன்.
தலைமுடியில்
சிக்கி சீரழிந்தது
சரிகை வேலைப்பாடு.

தரையில்
விரித்துப் படுத்தேன்
தடுக்கப்பட்டது
தரை தந்த சுகம்.

போர்த்திக் கொண்டு
பால் வாங்கப் போனேன்
இதழ் பிரியாமல் சிரித்தான்
எதிர் வீட்டுக்காரன்.

மேசை மீது விரித்து
தொலைக்காட்சிப் பெட்டியை
தூக்கி வைக்க்லாமென்றால்
அவையிரண்டையும்
வாங்கியாக வேண்டும்.

என்னத்தான் செய்வது
ஏகோபித்த
கரவொலிக்கிடையே
எனக்குப் போர்த்தப்பட்ட
பொன்னாடையை?


- ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It