வானமற்ற நிலா வெப்பக்கதிர் வீச
சத்தங்கள் செத்து விட்ட வீதியில்
சொல்லும் வார்த்தை போய் சேர
எல்லை இல்லாமல்
சுற்றும் முற்றும் பார்த்து
தலை சாய்த்து
கண்மூடி
உரக்க சொல்ல வந்தாள்
தன் பழைய காதலை…
முடியாமல் முணுமுணுக்க முயலுகையில்
தட்டி விட்டுப் போகிறது
சமூகத்தின் பேரிரைச்சல்…..
- ரவிகுமார். தி (raveerasa@gmail.com )