
விவாதித்துக்
கொண்டிருக்கும்
வெள்ளைக்கார
நண்பா..
ஒருவேளை
சோறில்லை என்றால்
ஒருமாதிரி ஆகிப்
போகிறது எனக்கு.
பச்சைக் காய்கறி
பழங்களோடு
பம்பரமாய்
சுழல்கிறாய் நீ.
இல்லை என்று
சொல்வதற்கு
இருமுறையாவது
யோசிக்கிறேன் நான்.
சட்டென்று நோ
சொல்கிறாய்
சாம பேதம்
பார்க்காமல்.
ஆயினும்
இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
இரண்டு
மனைவியென்றும்
இன்னொன்றுக்கான
முனைப்பில்
இருப்பதாய்
சொன்ன உன்
எகத்தாள சிரிப்பு
ஒன்றும்
ஏற்புடையதாய்
இல்லை எனக்கு.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (