
தனிமை காத்த வேளையில்
பேச்சுக்களின் தீவிரத்தை குறைப்பதற்காய்
யோசித்துப் பார்த்தேன்........
வெளியெங்கும் ஓயாத பேச்சுக்கள்
சலிப்பையே ஏற்படுத்தின மனமெங்கும்....
நண்பனுடன்,
அண்டை வீட்டானுடன்,
தெருக்கோடி நண்பர்களுடன்....
இப்படியாக....... நீண்டு .........
இறுதியில் குறைந்த
பேச்சுக்களின் எல்லை
முடிவிற்கு வந்தது.
மௌனமே எங்கும் வியாபிக்க
காலத்தின் போக்கில்
மௌனத்தின் அலறல்
பேச்சுக்களை விரும்பத் துவங்க
இப்போது பேசத் துவங்குகிறேன்
முன் எப்போதும் இல்லாத அளவு.....
- கா. ஆனந்தகுமார்