
இராணுவமும் கடலும்
செவிப்பறையை பிளக்கிறது
பீரங்கிச் சத்தமும் விமானத்தின் இரைச்சலும்
வெடித்துக்கொண்டேயிருக்கிறது
குண்டுகள்
சிதறி ஓடுகிறது
மனித உயிர்கள்
நடந்துகொண்டேயிருக்கிறது
படுகொலைகள்
சோர்ந்து விட்டன கைகள்
ஆதரவுக்கு நீட்டி... நீட்டி
நீர்த்துப்போனது நம்பிக்கை
மரணத்திற்கு தயாராகாத உள்ளம்
சொல்லக் கூசுகின்ற அச்சம்
பிரித்தறிய முடியதா வதை
நீண்டுகொண்டேயிருக்கிறது
இரவும் பகலும் மௌனமாய்
முல்லைத் தீவில்
- தங்கம் (