
அடைகாக்கும் கூழாங்கற்களின்
முதுகு வழமை கூடலாம்
அலைக்கட்டுகள்
வட்டங்களாய் விரிவுறுகையில்.
மணற் புள்ளிகள் குத்துவதால்
நதியின் கண்ணாடி வெளியில்
விழும் கீறல்கள்
வண்டலின் மிருதுவைக்
குறைப்பதில்லை.
தார்ச்சாலைகளில்
தண்ணி வண்டிகளின்
நீர்க்கோடுகள்
நினைவுறுத்துகின்றன
நில்லாத நதியுடனே
எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
அதன் பயணத்தை.
- மதன்