நிலத்தில் சிதறிக் கிடந்த தானியத் துகளொன்றினை
ஊர்வலமாய் எடுத்து சென்றன எறும்புகள்
இடைமறித்துக் கடக்க முயன்றேன் நான்
தடைதனை அறிந்து பின்னர்
பயணித்தன வேறு பாதையொன்றில்
எனதுருவத்தின் அறிதல் ஏதுமின்றி
நீள்கிறது அதன் உலகம்
என் போன்ற குறுக்கீடுகளுடனும்
அதனதன் உலகம் அதற்கானது
- கா. ஆனந்தகுமார்
கீற்றில் தேட...
அதற்கானது......
- விவரங்கள்
- கா.ஆனந்தகுமார்
- பிரிவு: கவிதைகள்