மாய மந்திரங்கள் மிகைத்த வாழ்வின் ![]() காற்றைத் தூவி அணைத்திடத் துணியா தேங்கிக் கிடக்கும் நீரில் நீராடும் சிறு குருவியொத்த மனதுன் காதல் கலந்து நிறைத்த மொழிகளை எண்ணிச் சிலிர்த்து வாழ்கிறது காதலின் நாளதைக் காவலுக்கு வைத்து நீலத்தினொரு சாயலோடு சிவந்திருக்கும் பொன்னந்தி மாலையொன்றிலுன்னழகிய விரல்கள் கோர்த்து ஒளிரும் வான் தாரகைகளின் தூரம்வரை நாமிருவரும் நடந்தபடி உன்னினிய வார்த்தைகளை மின்னல் துண்டுகளின் பிரகாசத்தோடான சிணுங்கல்களை கேட்டிடும் ஆவலை இன்றும் எழுதிக் காத்திருக்கிறேன் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. |
கீற்றில் தேட...
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 09
- விவரங்கள்
- எம்.ரிஷான் ஷெரீப்
- பிரிவு: கவிதைகள்