
மக்கி எருவாகி
விருட்சத்தில் நுழைந்து
கனிந்ததொரு பழமாகி
ஒரு குயிலுக்கு உணவாகி
குரல்வளையிலோரு பாடலாகி
பச்சைப் பிரதேசம் முழுதும்
ஒலித்து
மீண்டும்
உங்கள் செவியில் நுழைந்து
உங்கள் ரத்தத்தில் கலந்து
உங்களில் ஒருவனாகி
சுவாசிப்பேன்
நான்.