கீற்றில் தேட...

 

அலையேயில்லாத கடலின் பாவனையில்
அடுத்த புயலுக்குக் காத்திருக்கிறது
oceanமனசு.

நினைவுகள் ஓரிடமாய்
நங்கூரம் பாய்ச்சி யிருக்க
கனவுகள் வானந் தேடி
தேசாந்திரம் போயிருக்கின்றன

நிஜங்களை விழுங்க முடியாமல்
திணறும் சுவாசத்துடன்
நீலம் பாரிக்கத் தயாராயிருக்கிறது
உயிர்.

ஆழத்தில் அழுந்திக் கிடக்கின்றன, முத்துகள்
முத்துக் குளிக்க ஆளின்றி....