நிர்வாணம் பூண்ட

மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...
நாவிஷ் செந்தில்குமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.