அமர்ந்தபடி
காலையில் கண்ட
வெண்புறா

திறந்த கதவுச்
சத்தத்தில்
தாவிப்போய்
தன் இருப்பிடமாய்
கொண்டது
இன்னொரு காரின்
இரு சக்கரங்களுக்கு
இடைப்பட்ட
இடமொன்றை.
அலுவலக வேலைகள்
அத்தனைக்கும் இடையில்
இன்னமும் சிறகடித்து மனதில்
இம்சையாய் அந்த வெண்புறா
இடம் மாறி
இருக்குமா - அந்த
இன்னொரு கார்
கிளம்பும் ஓசையிலும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )