எனது கனவில் சிறுபூச்சியாய்
More articles by மாலதி மைத்ரி
- எங்களை விற்கவும் வாங்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது (01 பிப் 2014)
- கடலின்றி அமையாது உலகு - நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும் (29 அக் 2013)
- தமிழக படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள் (26 அக் 2012)
- சவப்பேழையின் அரசன் (20 மே 2010)
- அறியாமைகளின் அத்துமீறல்கள் (19 மே 2010)
நெருப்பைத் தொடும் ஆவல்
எல்லா உயிரினத்திற்குமுண்டு
நெருப்பைத் தொட்டு வளர்த்தவள் நீ
நெருப்பு
அணைந்த பூமியில் உருவாக்கப்பட்ட
முதல் நெருப்பு
இன்றுவரையிலும் உன் உடலின்
வெம்மையோடே நீடிக்கிறது
ஒவ்வொரு துளி நெருப்பிலும் நீ
தீ பெண்ணிலிருந்து பிறந்ததென்பாள்
என் தாய்
எனக்குள் தீயைத் தொட்டறியச் சோதித்தேன்
யோனி தகித்தது
- மாலதிமைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.