நான் எனது இன்று
என்னும் உன் வார்த்தைகளுக்குப் பின்னால்
பிரபஞ்சத்தைக் கைகளில்
உருட்டிக் கொண்டு
சிரித்துக் கொண்டிருக்கும்
கடவுளை நீ கவனியாமல் போனாலும்
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்
மனிதர்கள் கலைந்து சென்ற பிறகும்
தெருநாய்களெனச்
சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
அவர்களின் வார்த்தைகளை அமைதிப்படுத்த
அவர்கள் எதைத் தூக்கி
விசிறப் போகிறார்கள் என்பதை
காலையில் சிலுவையிலறைந்து
மாலையில் விடுதலையாகும்
கடவுள்கள் சிந்தும் குருதிகளின் வழியே
சொட்டிக் கொண்டிருக்கிறது
இன்றைய பொழுதும்
என்னுடைய கவலைகளெல்லாம்
நாளைய திருமணங்களுக்கு
காலையிலேயே
வீடியோ கவரேஜ் செய்ய
அந்தக் குட்டி ஹெலிகாப்டர்கள்
தாழப் பறந்து வரும் போது
சிறகடித்துக் கொண்டு
கரைந்து சிதறாமல்
அதற்கும் பழகியிருக்க வேண்டும்
அத்தனை மரத்துக்களின் காக்கைகளும்
மற்றும் அதன் அப்பாவிக் குஞ்சுகளும்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.