சிறுவளைவுகளில்
பெரும் மலைகள் வரையும்
கரம் வைத்திருக்கிறது காடு

*
அது துள்ளல் அல்ல அழுகை
மீண்டும் நீரில் விடுகிறான்
இப்போது நீந்தல் அல்ல நன்றி

*
அவருக்கு மட்டுமல்ல
அவர் வேஷத்துக்கும்
முள் கிரீடம்

*
இத்தனை வெயில் ஆகாது
இப்படித்தான் மழைக்கும் சொன்னோம்
இத்தனை மழை ஆகாது

*
பசி வந்தால்
வீட்டு நாய் குரைக்கும்
வீதி நாய் நிற்கும் நடக்கும் ஓடும்

*
தரை விழுந்த
இலை நிழலில்
காற்றின் குலவை

*
வளர்ந்துவிட்ட மரத்தில் காணவில்லை
வெட்டியவன் கண்களில்
தழும்பு

*
பேசப் பேச வந்த மறதியை
ஓவியமாக்கிக் காட்டுகிறான்
நாள்பட்ட சாலைவாசி

*
குட்டி நதி ஓடுகிறது
கண்கள் கசக்காமல்
அழுகிறவர் கன்னத்தில்

*
வழக்கமாக ஒளிந்து நின்று பார்ப்பான்
என நம்பிய குட்டியைத் தான்
காட்டில் விட்டு வந்திருக்கிறான்

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.