அப்படி இல்லை
என்னிடம் பேச்சு இல்லை
மேலும்
என்ன பேசுவதென்று
தெரியவில்லை
நம்பத்தான் மாட்டார்கள்
எழுதி வாழ்பவனின்
உட்புறச் சிக்கல் இது
பேச்சும் எழுத்து போலவே
இருக்கும் என்பதை
எப்படி புரிய வைக்க
கேட்க வசதியானவர்களுக்கு
படிக்க வசப்படுவதில்லை
படிக்க வழக்கமானவர்களை
நான் கேட்டுக்கொள்வதில்லை
மற்றபடி
மௌனத்திலும்
எழுதத் தெரிந்தவனிடம்
எந்தப் புகார் எழுப்பியும்
பயனில்லை
இது புலம்பலுமில்லை
- கவிஜி