வெறுமையில்
இயலாமையைச் சமைத்து
பசியாறிய அன்பில்
தூங்கிய பொழுது
கனவில்
தானேக் குளித்து
சுத்தப்படுத்திக் கொண்டது
பாத்திரங்கள்.
எப்பசியிலும்
கிடைக்கும்
ஆகாரப் போதையின்
இடுப்பு
நோவில்
வயிற்றில்
உறங்குகிறது
விட முடியாதவனின் வேதனை.
வயிற்றின்
இலவச ஆகாரம்
விலையில்லாம்
கிடைத்ததை
விற்று
படிக்க பண்டம்
வாங்க
எழ வேண்டியதாகிறது
இத்தனை
இடரிலும்
ஏற்றம் காண
ஒரே வழி
கல்வியானதால்.

- ரவி அல்லது