liquor addiiction 400லாஹிரியில் வீழ்ந்த நாக்குகள்
கற்கும் கூடங்களின்
கட்டிடங்களை ஆட வைக்கிறது.

தாமதத் திறப்பின்
கரிசனத்தில்
தாகம் தீர்க்கும்
கடைகள் மூடியபடி
புது வடிவங்களில் தள்ளாடுகிறது.

ஒப்பாரி ஓலங்கள்
ஊரெங்கும் ஒலித்தாலும்
நிர்வாக வருமானத்திற்கு
நிலையானதென
ஆட்சிகள் மாறினாலும்
ஆட்சிகள்
மகிழ்வு பானங்களையே
உறிஞ்சிக் குடிக்கிறது.

அறப் பழக்கங்களை
அலமாரியில் அரிக்கக் கொடுத்துவிட்டு
கரையான்களைக் குறை கூறி
காலத்தைக் கழிப்பவர்கள்
பெண் பால் யாவையும்
பிய்த்தெறிந்தார்கள்.

ரத்தம் நக்கும் தோட்டாக்களுக்கிடையில்
நினைவூட்டிகளின் பொதுவுடமையில்
கொஞ்சம் நிம்மதிகள்
பங்கிடப்படுகிறது.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.