கல்லாய் சமைந்தவளின்
கருவில் உதித்தவர்கள்
திருப்பாத தூளிகளிலிருந்து
எழுந்து வரும்
திருத் தூசுகளுக்காக
காத்திருக்கும் நேரத்தில்
குடற்புழுவாய்
நெளிந்து கொண்டிருக்கிறது
பிரியாத உயிர்

அதோ தூரத்தில்
ஒருவன் வந்து கொண்டிருக்கிறான்
அவன் இவனாகவும் இருக்கக் கூடும்
சிறிது நம்பிக்கையில்
கருங்கல்லுக்குள் தேரையாக
துடிக்கிறது மனது

அருகே வந்தவன்
அழுக்குக்குள்
புதைந்திருக்கும் அவயங்களை
ஒன்றொன்யாய் உற்று நோக்கி
எச்சில் விழுங்குகிறான்

கெளதமன்களும்
இந்திரன்களும் இப்போது
அவளது வயிற்றில்
சிறு கற்பிண்டமாக
உருண்டு கொண்டிருக்கிறார்கள்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.