கீற்றில் தேட...

நல்ல உறக்கத்தில்
சங்கிலி
என் கனவினில் வந்து
இரண்டு ரொட்டித் துண்டுகளும்
கொஞ்சம் தண்ணீரும் கொடு என்றது

மறுபேச்சின்றி
குளிர் சாதனப் பெட்டியிலிருந்து
இரண்டு ரொட்டித் துண்டுகளும்
கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும்
எடுத்துக் கொண்டு
வாசலுக்கு விரைந்தேன்

அங்கே எனக்காகவே
காத்திருந்தது போல்
வந்து தாவி
என் கைகளிலிருந்து
பறித்து தின்ன
ஆரம்பித்து விட்டது

இரண்டு ரொட்டித் துண்டுகளும்
கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் தான்
வாழ்க்கையா என்றேன்

என்ன செய்வது நாய்கள்
காலத்தை ரொட்டித் துண்டுகளாய்
தின்ன முடிவதில்லையே என்றது

- தங்கேஸ்