ஒரு நெருப்புக்கங்கு போல
பெரிய கோவிலுக்கும் மேலே
சொலித்துக்
கொண்டிருக்கிறது
ஒற்றை நட்சத்திரம்
தரிசனம் பார்க்கும் ஆசையா
அல்லது தானுயர்ந்தவன் என்ற
தம்பட்டமா
என்னவென்று தெரியவில்லை
கூடடைந்த பறவைகளுக்கு
மின்மினிப் பூச்சியாகவும்
பொழுது போகாத கவிஞனுக்கு
காற்புள்ளியாகவும்
ஒற்றையடிப் பாதையில் செல்பவனுக்கு
டார்ச் விளக்காகவும் தோன்றலாம்
ஆனால் கருவறையிலிருந்து பார்க்கும்
விக்கிரகங்களுக்கு
அது என்னவாகத் தோன்றும்?
- தங்கேஸ்