கீற்றில் தேட...

ஒரு வார்த்தை
அது கடக்கவியலாத
துயரத்தின் வெளிப்பாடு.

ஒரு வார்த்தை
அது மன வெதும்பலின்
குறியீடு.

ஒரு வார்த்தை
அது பற்றிச் சூழும்
பெருந் தீ.

ஒரு வார்த்தை
அது தப்பிக்க முடியாத
தொடர் வினை.

ஒரு வார்த்தை
அது மாயங்கள் நிகழ்த்தும்
மந்திரச் சொல்.

ஒரு வார்த்தை
அது ததும்பி வழியும்
நன்றிப் பிரவாகம்.

ஒரு வார்த்தை
அது ஒதுக்கிவிட
முடியாதபடியாக
உள்ள யாவும்.

ஒரு வார்த்தை
அது உற்று நோக்க வேண்டிய
நாம்.

- ரவி அல்லது