கீற்றில் தேட...

சொல்லிக் கொள்ளலாம்
புகழ்ச்சிக்கு மயங்கவில்லை
முனங்கலாம்
யாருக்கு வேணும் விருது
புலம்பலில் நியாயமான
கோபம் இருக்கலாம்
இருப்பினும் உள்ளே நெளியும்
புகைச்சலும் இல்லாமலா

தன்னைப் போன்றே
தன்னிலை தவிப்பிலிருப்போர்
எழுதிய பாராட்டுக் கவிதை ஒன்றுக்கு
மனம் சிலிர்த்து குரல் ஓங்கும்
இதுக்கு மேல என்ன விருது வேணும்
விருதுக்கான வாசலில்
புரண்டு கொண்டே கிடக்கும்
மனதுக்கு
குழந்தையின் அழுகை
கோழியின் கழுத்து

மேடையேறும் கால்களை
மெய் வலிக்க காணும்
கண்களில் தவிப்பிருக்கும்
தகுதிக்கும்
அது அல்லாததுக்கும் இடையே
மிடில் கிளாஸ் இலக்கியம்
மண்டை வலியை
கிரீடமாக்கிக் கொண்டிருக்கும்

- யுத்தன்