1.
எடைக்குப் போகும்
பழைய மிதிவண்டி
நினைவூட்டுகிறது
அப்பாவின் நினைவுகளை...
2.
வாழ்நாள் முழுவதும்
செங்கொடி ஏந்தி
போராட்டங்களில்
பங்கேற்ற அப்பா
வீட்டு அலமாரியில்
சேர்த்து வைத்திருந்தார்
நிறைய புத்தகங்கள்.
3.
முதியோர் காப்பகத்தில்
ஆலமரத்து விழுதுகளைப் பார்த்து
கண்ணீர் விடும் முதியவர்
- மு. பிரபு