கீற்றில் தேட...

ஆசையின் பொருட்டான
நகர்தலின் விதி
எதுவாகவும் இருக்கட்டும்.

உன்
அருகாமையற்ற பெறுதல்
யாதொன்றைக் கொடுத்து
சிறந்தாலும்
செயற்கை பூரித்தலைத் தவிர
செய்வது வேறொன்றுமில்லை
எனக்கு.

விட்டகல முடியாத
இத்துயரப் பாடின்
கேவலை
நீ அறிந்தும்
அனுப்புவதன்
பரிவை நினைத்து
வழியும் கண்ணீரைத் துடைத்து
கட்டியணைத்துக் கொள்
காணாது போகும்
துடிப்பில் இதயம்
லயம் கூடிக் கழிக்க.

- ரவி அல்லது