யாவும்
உறங்கிக் கிடக்கும்
நடுநிசியில்
கொட்டும் மழைக்கு
அநேக காரணங்கள்
இருக்கலாம் பெய்வதற்கு.
நனைதலின் பொருட்டான
விழிப்பில்
மாடியில் குளிப்பதை
எவரும் பார்க்காது
போர்த்திய இரவை
மின்னல்தான்
எட்டிப் பார்த்தது
வெட்கமுற வைக்குமாறு
குளித்தலைப் பார்க்கும்
கொடூரத்தை சத்தமற்று.
- ரவி அல்லது