கீற்றில் தேட...

ஒன்றென இருக்கிறது
தோற்றத்தில்
வழிபாட்டிடமும்
வாழுமிடமும்
கற்களால்
காணுமொரு ஈர்ப்பால்.

ஒன்றென புகைகிறது
வெண்மையாக விறகும்
வாசனைப் பொருளும்
நெருப்பில்
அசைந்தாடும் சுருளாக.

ஒன்றெனத் தெரிகிறது
இலைகள் பச்சையாக
பல வடிவத் தோற்றத்தில்
பசுமையாக.

ஒன்றெனக் காண்கிறது
புத்தரையும்
ஸோர்பாவையும்
மனிதரென
பேச்சாற்றலின் மிகைப்பால்.

யாவும் இருக்கிறது
வித்தியாசமற்று
தெரியும்
தோற்றத்தில் ஒன்றென.
குணத்தால்
மாறியதன் போக்கில்
உணரும்பொழுது
புரியும்
அகத்தூரில்
வியக்க வைக்கும்
ஒன்றுடனொன்று தொடர்பென...

- ரவி அல்லது