வெயில் என்பது வெப்பம் அல்ல
தாக்கம் அல்ல புழுக்கம் அல்ல
வியர்வை அல்ல
பிசுபிசுப்பு அல்ல
அனல் கொதிப்பு அல்ல
கொளுத்துவது அல்ல
தகிப்பும் அல்ல வெறுப்பும் அல்ல
வெங்கொடுமையுமல்ல
தரையில் கிடந்தாலும்
தங்கப் பூக்களாய் ஒளிரும்
நெருஞ்சியாய் நிலமெங்கும்
பொன் மஞ்சள் துகளாய்
பொழிந்து வரமாய்
தரையிறங்கும் பெருங்காமத்தின்
ஒளி முத்தமடி

- சதீஷ் குமரன்

Pin It