ஆளாகிவிட்டேனாம்
உறவினர்களின் ஆரவாரம்
தோழிகள் சகிதம்
பள்ளியில் அரட்டைமுடிந்தே போனது
நேற்றோடு.....
தென்னங்கீற்றுகள்
முதல் சிறையாய்..
சூட்டின பூச்சரம்
கை விலங்காய்...
என்றும் மாறாதது
முற்றத்தில்
கூட்டமைத்து வசிக்கும்
சிட்டுக்குருவியின் உடனான
என் நட்பு......!
- வில்லியனூர் ராஜ கருணாகரன் (