இரவின் போர்வையை
இறகுவருடலில் விலக்கி
கள்வன் அணைத்தான்
விடியல் வெய்யில்
பொன்னிற ஒளிக் கவர்ச்சியில்
மழலை அள்ள விளையும்
மஞ்சள் விடியற்காலை வெயில்
கண்மட்டுமே பார்த்த காதல்
வெண்ணிற பனி லோகையில்
புல் பாதரியார் ஆசிர்வதிக்க
புது மனைவியை முத்தமிடும்
விடியல், ரோஜா இதழில்
இரவு குளிரின் மீதம்
ரோஜாயிதழில் வெண் பனி
பெண்ணிதழில் செந்நிற முத்தக்கனி
கீற்றில் தேட...
காலைவெய்யிலும் பனித்துளியும்
- விவரங்கள்
- காயத்ரி மகாதேவன்
- பிரிவு: கவிதைகள்