திறந்தவெளி புறாக் கூடுகள்
கட்டட டப்பாக்களை
உயரத்தில் செய்திருக்கிறது

*
வானத்தை பூமியில் இருந்தே
தொடங்குவது தான்
சிறகுகளின் சிறப்பு

*
காக்கைக்கு சோறு வைத்தேன்
காக்கை எனக்கு
வானம் வைத்தது

*
விடிய விடிய எழுதினவன்
இல்லை நான்
விடிவதற்காக எழுதியவன்

*
சட்டென கவிதை தோன்றாதபோது
இருக்கவே இருக்கு
கல்யாண்ஜி புகைப்படம்

*
கொண்டி விழி மறைப்பான்
என்றால்
மின்விசிறி ஒலி குறைப்பான்

*
நான் கத்தல பாடினேன்
என்று சொல்ல
மாட்டுக்கு வாய்ப்பில்லை

*
ஆன்- க்கும் ஆப் -க்கும் இடையே
நான் நான் நான் என்று
றெக்கை அடிக்கும் மின் விசிறி

*
உள்ளாடை நனைய நனை
நிர்வாண மழைக்கு
அது தான் துணை

*
குடும்ப பாரம்
பெண்களுக்கு
வார பாரம் திங்களுக்கு

*
இது மஞ்சள் சட்டையல்ல
நான் தினம் உடுத்தும்
உன் கொஞ்சல் சட்டை

- கவிஜி

Pin It