அந்தியில் கிழக்கே கூடடங்க
திரும்புகிற பறவை
அதிகாலையில்
மேற்கே பறந்து வருகிறது
எப்போதும் மாறாத இயல்பு தான்

இந்த வானம் கிழக்கும் மேற்கும்
பறத்தலில் முடிந்துவிடுமா அம்மா
என்கிறாள் பாப்பூ

முடிந்துவிடாது தான்
ஆனாலும் கேள்வியை முடிக்கும் பதிலை
உடனடியாக சொல்ல வேண்டுமா என்ன...?

முதலில் பறவையாக வேண்டும்
அடுத்து பறந்து பழக வேண்டும்
அதன் பின்பே பதில் சொல்ல வேண்டும்.

- கலைச்செல்வி

Pin It