ரெட்டைவால் கரிச்சான் குருவியாய்
அலையும் வெயில் நகராமல்
உச்சிப் பொழுதில் ஓய்வெடுத்து
உட்கார்ந்து கொண்டது
குட்டைச் சேற்றிலேயே
கிடக்கும் எருமையின் கொம்பில்
பனங்காடையிடம் தன் புழுக்கத்தைப்
பாடலாக்கித் தந்துவிட்டு
மணல் லாரிகளின் மேல்
ஏறிப் போகிறது
கோடை.

- சதீஷ் குமரன்

Pin It