நீள் சதுர முகத்தில்
சந்தன நிறம்
இடது வகிடு எடுத்து
ஒரு பக்கம் முன் தூங்கும் கூந்தல்
இதழில் மோனாலிசா புன்னகை
இசை கூட்டிய கம்மல்
காதோர கவிதை
நெற்றி நெகிழும் சிறு கோட்டில்
கன்னம் புனையும் புது நேர்த்தி
செங்கழுத்தில் மின்னும் கொடி
சிங்கார கண்ணுக்குள் வண்ணக் கனவு
சித்திரமே எழுந்து வா
சித்தகத்திப் பூக்கள் காத்திருக்கிறது

*
இவ்விரவில் குளத்திற்கு
எங்கு போக
அடம் பிடிக்கும் நிலவை
இன்னும் எத்தனை நேரம் தான்
கையில் வைத்திருக்கும்
வானம்

*
அத்தனை காற்றுக்கு விழாத
அந்த இலை
அந்தியில் வந்தமர்ந்த பாட்டுக்கு
விழுந்து விட்டது

*
நெடு மரங்களை போகையிலும்
குறுஞ்செடிகளை வருகையிலும்
குறிப்பிட காரண
காரியமெல்லாம் இல்லை
வந்து போகும் வெளிச்ச விதி அப்படி

- கவிஜி

Pin It