பார்ப்பது போலத் தான் தெரிகிறாய்
பாடல் ஒலிக்கிறதே
நீ சிலை என்றால் இனி நம்பாதே

*
நீ வீடு நுழையும் வரை
வெண்மேகத்தில் இருக்கிறது
நம் வீதி

*
உன்னை ஓடவிட்டு
நீயே துரத்துவது போல
உன் எல்லாக் கவிதைகளும்

*
குடத்தைக் கொட்டி நீரெடுக்கிறாய் நீ
உன்னைக் காட்டி
தேன் எடுக்கிறது நீர்

*
மனதின் நடுவே நீர்ப்பாறை உருள்கிறது
தூக்கத்தில் குழந்தை சிரிப்பது போல
பேசிக் கொண்டே இருக்கிறாய்

*
பகலிலும் நிலா வேஷம்
போட்டலைகிறாய்
வானச் சுமை எனக்கு

*
இருளுக்கு என்ன தெரியும்
கண்களை இறுக
மூடிக் கொள்வதைத் தவிர

*
மச்சக்காரர்கள் உள்ளே
பிச்சைக்காரர்கள் வெளியே
புது கோயிலிலும் பழைய முறைதானா

*
எத்தனை மரம் வெட்டியிருப்பான்
புத்தனை
வெட்ட நினைத்தவன்

*
நதியில் விழுந்த இலை காண்
அது மதியில் எழுந்த
நீர் மான்

- கவிஜி

Pin It