இழுத்து வளைத்து
திருப்புதலும்
முன்னங்கைகளுக்குள்
சிக்கிய மார்புகளும்
கழுத்தடியே மாட்டிய முகமும்
கால் ஒன்றில்
கால் மூடும் லாவகமும்
உங்களுக்குத்தான் ஓவியம்
உற்று நோக்கும்
முரட்டு சிங்கிளுக்கு
முதலுதவி தேவைப்படும்
உடல் பெட்டி

*
மீன் மாட்ட கிட்ட வருகையில்
தூண்டிலைத் தூக்கி விடும்
நுட்பத்தை
எழுபது வயதில்
கற்றுக் கொடுத்திருக்கிறது
குளம்

- கவிஜி

Pin It