லட்சம் பூக்களுடன்
கோடையைக் கொண்டாடும்
வெட்டவெளி வேப்பமரம் அருகே
ஆவாரம் பூக்களாய்
வெயில் போர்த்தி நிற்கிறேன்
சாகாத காதலைச் சுமந்து.
செம்போத்தும் மைனாக்களும்
கொத்திக் கொத்தி ருசி பார்த்து
உதிர்த்துப் போகிறது
செங்காயாய் மணம் வீசும்
நம் முத்தங்களை
வெப்பக் காற்றாகி வீசிவரும்
வெந்தழல் மோகம்
உச்சிப் பரிதியாய் உயிரில்
கொதிக்க
பத்தியம் கிடக்கிறேன்
வெந்து புழுங்கும்
மனக்கோடை தணிக்க
வந்து போயேன்
பெருமழையாய்
பாலேறிப் பச்சை பிடிக்கட்டும்
பசலை நெஞ்சம்.

- சதீஷ் குமரன்

Pin It