அன்பை நுகர்கின்ற
தருணங்கள்
பிரபஞ்சத்தை எதிர்நோக்கி
சதிராடும் இலக்கணங்கள்
வெண்ணிறமோ கண்ணிறமோ
துல்லியமாய் சொல்வதென்றால்
ஏதேனும் ஒன்று
எப்போதும் இல்லை
இருப்பதும் இல்லாமல் இருப்பதும்
நெடும் நாழிகை
வசந்தகால வனப்பில்
ஊடுருவும் சங்கேத உதிர்வு
நிறத்தலும் இறத்தலும் பின்
துளிர்த்தலும் மாதுளக் கனி தோட்டம்
ஞாபகங்கள் உலுக்கும்
நினைவுக்கு
எதனோடு எதன் பிழை
நறுமணம் விலக்கப்பட்ட உளமழைக்கு
இசைக்கும் மழைத்துளி
மூழ்கும் பனிப்பழங்கள்
தத்தளிக்கும் முடிவற்ற வாழ்வாய்
எப்போதும் துளிர்க்கிறது....

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It