வெகுநேரமாக எதையோ
கொத்தி கொத்தி
தின்று விழுங்கும்
அப்பட்சியின் எதிரில் தான்
அமர்ந்திருந்தது
நான் எனும் உடல்
கொத்துதலுக்கும் விழுங்குதலுக்குமான அவசரத்தை
மிக அண்மையில் இருந்து தான்
சிலாகித்துக் கொண்டிருந்தது
இக்கண்கள்
இன்னும் கொஞ்சம் அருகில்
செல்லலாமா?
ம்ம் ம்ம்
படபடத்து சிலிர்த்துப் பறந்த
அப்பறவை விட்டுச்சென்ற
இறகில்
இன்னும் இருந்தது
தின்ற திணையும்
தின்னும் பசியும்....!

- கருவை ந.ஸ்டாலின்

Pin It