ஏரி குளம் கண்மாய்
நிரப்பிப் பொழிந்தாலும்
வழிந்தாலும்
ஓயாமல் பெய்தும் கொட்டியும்
ஆலங்கட்டிகளை அள்ளி
வீசினாலும்
விடுமுறையை பெற்றுத் தராத
அடைமழை
புத்தகப் பைகளை விடவும்
பெருஞ் சாபச்சுமைதான்
குழந்தைகளுக்கு

- சதீஷ் குமரன்

Pin It